ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக் கொள்ளாவிட்டால் பதவியை ராஜினாமா செய்வோம் என்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் ராஜேஷ் குமார் கூறுகிறார்.
தமிழக முதலமைச்சரின் கற்பனையில் கூட அவருக்கு இதுபோன்ற கருத்து இருக்காது.
அமைச்சர்கள் இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் அகில இந்திய அளவில் நடைபெறும் தேர்தலில் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளராக கண்டிப்பாக இருக்க முடியும்.
இந்தியா கூட்டணிக்கு காங்கிரஸ் தலைமை வகிப்பதால் காங்கிரஸ் வேட்பாளர் தான் பிரதமர் வேட்பாளராக முடியும்.
மேலும், இதுபோன்று சர்ச்சைக்குரிய கருத்து களை அமைச்சர்கள் தெரிவிக்காமல் இருக்க முதலமைச்சர், அவர்களிடம் வலியுறுத்த வேண்டும்.
தமிழகத்தில் மிகப்பெரிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக ஆட்சியை முதலமைச்சர் ஜோசப் விஜய் ஊழலற்ற அரசாக நடத்தி வருகிறார். இதுவரை ஒவ்வொரு துறையிலும் கப்பம் கட்டித்தான் பணிகள் நடைபெறும் என்ற நிலை இருந்தது. தற்போது அந்த நிலை முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.
எந்த அலுவலகத்துக்கு சென்றாலும் பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டிய தேவை இல்லை. எந்தத் துறையிலும் கமிஷன் இல்லாமல் நேர்மையான நிர்வாகம் நடைபெற்று வருகிறது.
100 நாட்களை கடந்துள்ள தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு 100-க்கு 80 மதிப்பெண்கள் வழங்குகிறேன். ஊழலை முழுமையாக ஒழிப்பது சாதாரணமான காரியம் அல்ல. அது இமயமலையை நகர்த்துவது போன்ற கடினமான பணி.
அதே நேரத்தில் தமிழக அரசு ஊழலை ஒழிக்கும் நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. எனது நற்சான்றை தமிழக அரசுக்கு வழங்குகிறேன்.
அரசின் நிர்வாகத்தில் எந்தவிதமான முறைகேடு
களுக்கும் இடம் கொடுக்க மாட்டோம் என்ற தமிழக அரசு நிலைப்பாடு வர வேற்கத்தக்கது.
அவ்வாறு முறைகேடுகள் நடை பெற்றால் சம்பந்தப்பட்ட வர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சில மூத்த அதிகாரிகள் அரசுக்கு முழுமையாக ஒத்து ழைக்கவில்லை என்பது எனது கருத்து.
இவ்வாறு அவர் கூறினார்.