குன்றத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் மலைக்குன்றின் மீது அமைந்துள்ளது. முருகனின் அவதார நாளான வைகாசி விசாகத்தை முன்னிட்டு குன்றத்தூர் முருகன் கோவிலில் அதிகாலை முதலே சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அதிக அளவில் வந்தனர்.
பக்தர்களின் வசதிக்காக பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசனம் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. வைகாசி விசாகத்தை முன்னிட்டு உற்சவர் முருகன் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதில் சென்னை மட்டுமல்லாது பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் திரண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். கோடை வெயிலின் தாக்கத்தால் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக கோவில் வளாகம் முழுவதும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.
மேலும் படிக்கட்டின் மீது பச்சை நிற பந்தல்கள் அமைக்கப்பட்டு இருந்தது. ஏராளமான போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.