தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, எழும்பூரில் இருந்து மதியம் 1.15 மணிக்கு புறப்பட்டு மதுரை செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12635) வருகிற 11, 14, 16, 29, 31 ஆகிய தேதிகளில் மதுரைக்கு 1 மணி நேரம் 10 நிமிடம் தாமதமாக சென்றடையும்.
அதே போல, மேற்குவங்க மாநிலம் ஹவுராவில் இருந்து இரவு 11.45 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (12839) வருகிற 16, 20, 23, 27, 30 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலுக்கு 55 நிமிடம் தாமதமாக வரும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.