வைகை அணை 
தமிழக செய்திகள்

வைகை அணை நீர்மட்டம் உயர்வு

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.14 அடியாக உயர்ந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை பொய்த்ததால் வைகை அணையின் நீர்மட்டம் உயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை முன்னதாக தொடங்கும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. தேனி மாவட்டத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இருந்தபோதும் வைகை அணைக்கு குறைந்த அளவே தண்ணீர் வந்தது. இதனால் அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக பெய்த மழையால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் இன்று காலை 43.14 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு 244 கனஅடி நீர் வருகிறது. குடிநீர் திட்டங்களுக்காக 86 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. மழை ஏமாற்றியதால் முதல்போக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. எனவே வடகிழக்கு பருவமழை கைகொடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர். அணையில் 1218 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

பெரியாறு அணை

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.30 அடியாக உள்ளது. 299 கன அடி நீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 400 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அணையில் 1961 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 26.40 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 102.66 அடியாக உள்ளது. 28 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. சண்முகா நதி அணையின் நீர்மட்டம் 26.25 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. பெரியகுளம் 7, ேசாத்துப்பாறை 0.2 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

SCROLL FOR NEXT