தமிழக செய்திகள்

ஊரப்பாக்கத்தில் தொழிலாளியை அடித்து கொன்ற நண்பர் கைது

நள்ளிரவில் மதுபோதையில் நண்பர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதல் உருவானது.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், மாதனபள்ளி, காந்தி நகரை சேர்ந்தவர் முனிராஜ் (வயது38). இவர் ஊரப்பாக்கம், சிவகாமி தெருவில் உள்ள ‘சென்டரிங்’ கடையில் தங்கி தொழிலாளியாக வேலை செய்து வந்தார். அதே கடையில், சென்னை, கொருக்குபேட்டையை சேர்ந்த லட்சுமணன், தங்கி வேலை பார்த்தார்.

தகராறு

நண்பர்களான இருவரும் இரவு, ஊரப்பாக்கம், காரணைபுதுச்சேரி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்து விட்டு தங்கி இருந்த அறைக்கு வந்தனர். நள்ளிரவில் மதுபோதையில் நண்பர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதல் உருவானது.

கைது

இதில் ஆத்திரம் அடைந்த லட்சுமணன் அருகில் இருந்த உருட்டு கட்டையால் முனிராஜ் தலையில் ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த முனிராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து, கிளாம்பாக்கம் போலீசார் முனிராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய லட்சுமணனை தேடிவந்தனர். இந்த நிலையில் ஊரப்பாக்கம் அடுத்த காரணை புதுச்சேரி கிராமத்தில், உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த லட்சுமணனை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

SCROLL FOR NEXT