தாம்பரம் போக்குவரத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரணை புதுச்சேரி விநாயகபுரத்தைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இன்று காலை ராஜேஸ்வரி வீட்டில் இருந்து ஊரப்பாக்கம் வழியாக தாம்பரம் நோக்கி மொபட்டில் சென்றார். அப்போது சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது மோதாமல் இருக்க வண்டியை திருப்பியபோது பின்னால் வந்த அரசு பஸ் திடீரென ராஜேஸ்வரி ஓட்டி வந்த மொபட் மீது மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த ராஜேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தாம்பரம் போக்குவரத்து போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.