தவெக சார்பில் கடந்த 2025 செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் தேர்தல் பிரசாரத்தின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 41 பேருக்கு, தமிழ்நாட்டு முதலமைச்சர் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 அன்று தேர்தல் பிரசாரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அப்போது பிரசாரத்தில் கலந்து கொள்வதற்காக விஜய் வந்தபோது, அனுமதிக்கப்பட்ட கூட்டத்தை மீறி, அளவுக்கு அதிமாக மக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதன் காரணமாக தனது பிரசாரத்தை பாதியில் முடித்து கொண்டு விஜய் அங்கிருந்து கிளம்பினார்.
இதையடுத்து இந்த கூட்ட நெரிசலில் 10 குழந்தைகள், முதலியவர்கள் மற்றும் பெண்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர்.
மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்; இந்த நிலையில் கரூர் சம்பவம் நடந்து ஓராண்டு ஆகியுள்ள நிலையில், உயிரிழந்த 41 பேருக்கு, தமிழக முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் எக்ஸ் தளத்தில் தனது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம். கடந்த வருடம், இதே நாள், அதாவது 2025 செப்டம்பர் 27, என் வாழ்நாளில், நம் கரூர் சொந்தங்களின் வாழ்வில், நம் தமிழ்நாட்டு உறவுகளின் மனத்தில் ஆறாத ரணமாக, தீராத வலியாக, வேதனையான நிகழ்வு நடந்த நாள்.
சொல்ல முடியாத சோகத்தைச் சுமந்து நிற்கிறோம், நாமும் நம் கரூர் சொந்தங்களும், தமிழக வெற்றிக் கழகத்தின் சொந்தங்களும்,
நம் இதயத்தில் சுமந்த உறவுகளை இழந்து தவிக்கும் நமக்கு, ஆறுதலாகவும் ஆதரவாகவும் அரணாகவும் நாமே இருப்போம்.
நினைவில் வாழும் அனைத்து உறவுகளுக்கும் நம் இதய அஞ்சலி”
இவ்வாறு அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.