தமிழக செய்திகள்

‘ஸ்டார்ஸ் திட்டத்தில் ரூ.102 கோடி செலவில், 1147 மாணவர்கள் பலனடைந்துள்ளனர்’ - விஐடி வேந்தர் கோ.விசுவநாதன்

அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கும் ஸ்டார்ஸ் திட்டத்தில் ரூ.102 கோடி செலவினம் 1147 பேர் பலன் அடைந்தனர் விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தகவல்.

கிராமப்புறங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இலவச உயர்கல்வி வழங்கும் வகையில் கடந்த 2008-ல் தொடங்கப்பட்ட ஸ்டார்ஸ் திட்டத்தில் இது வரை மொத்தம் 1147 மாணவர்கள் பலன் அடைந்துள்ளதாகவும், இவர்களுக்கு இலவசக் கல்வி, தங்குமிடம், உணவு என விஐடி நிர்வாகம் ரூ.102 கோடி செலவழித்துள்ளாதகவும் ஸ்டார்ஸ் தினம் நிகழ்ச்சியில் பேசிய அந்நிறுவன வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் திருப்பூர் ராம்ராஜ் குழுமத்தின் நிறுவனர் தலைவர் கே.ஆர்.நாகராஜன், சிறப்பு விருந்தினராக விஐடி ஸ்டார்ஸ் முன்னாள் மாணவியும், தேனி தனி துணை ஆட்சியருமான ஜெ.கவிதா, விஐடி துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி, ஸ்டார்ஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் மீனாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.