தமிழக செய்திகள்

பாக்யராஜ் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின், கனிமொழி அஞ்சலி

உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழியும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

தமிழ் சினிமாவின் "திரைக்கதை சக்கரவர்த்தி" என்று போற்றப்படும் பிரபல இயக்குநரும் நடிகருமான கே. பாக்யராஜ் (வயது 73) இன்று காலை மாரடைப்பால் காலமானார். அவரது மறைவு செய்தி கேட்டு தமிழ் திரையுலகினரும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.

சென்னை வள்ளுவர் கோட்டம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் உடலுக்கு திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தும் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்பு பாக்யராஜ் மகன் மற்றும் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழியும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

SCROLL FOR NEXT