முதலமைச்சர் விஜய்- உதயநிதி ஸ்டாலின் 
தமிழக செய்திகள்

மிசா பற்றி பேச முதலமைச்சருக்கு என்ன தகுதி இருக்கிறது?- உதயநிதி ஸ்டாலின்

முதலமைச்சரின் நண்பர்கள், அவர்களுடைய ஆலோசகர் விஷ்ணு ரெட்டி, அவரது உறவினர்கள் கனிமவளத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

மிசா பற்றி பேச முதலமைச்சருக்கு என்ன தகுதி இருக்கிறது. இவர் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து என்று எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழ்நாடு சட்டசபையில் பேச அனுமதி மறுப்பதாக குற்றம்சாட்டி வெளிநடப்பு செய்த நிலையில் எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

* சினிமா சூட்டிங் டயலாக் போல முதலமைச்சர் பேசிக் கொண்டிருந்தார். அதனால் தான் தொடர்ந்து கோஷம் போட்டோம்.

* முதலமைச்சர் விஜய் மீதே வழக்கு உள்ளது. ரூ.15 கோடி வருமானத்தை மறைத்ததாக வழக்கின் போது தாமதமாக வழக்கு தொடர்ந்துள்ளதாக ஒப்புக்கொண்டவர் முதலமைச்சர் விஜய்.

* பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் மீதும் அமலாக்கத்துறை வழக்கு உள்ளது.

* வழக்கு நிலுவையில் உள்ள விஜயபாஸ்கர், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோரை உடன் சேர்த்து வைத்துள்ளார் முதலமைச்சர் விஜய்.

* எங்களை மிரட்டுவதற்காக லஞ்ச ஒழிப்புத்துறை வைத்து கே.என்.நேரு வீட்டில் ரெய்டு நடத்தினார்கள்.

* முதலமைச்சரின் நண்பர்கள், அவர்களுடைய ஆலோசகர் விஷ்ணு ரெட்டி, அவரது உறவினர்கள் கனிமவளத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

* கனிமவளத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ள விஷ்ணு ரெட்டி உள்ளிட்டோர் என்ன பொறுப்பில் உள்ளனர்?

* விஷ்ணு ரெட்டி, சுஜய் மற்றும் அனில் கன்ட்ரோலில் கனிமவளம் உள்ளது என்று வெளிப்படையாக குற்றச்சாட்டுகிறேன்.

* ஒருதலை பட்சமாக செயல்பட்ட சட்டசபை தலைவருக்கு தி.மு.க. சார்பில் கண்டனம் தெரிவிக்கிறோம்.

* முதலமைச்சர் விஜய் பேசும்போது சபாநாயகர் எங்கள் பக்கம் திரும்பக்கூடவில்லை. தவெக அரசுக்கும் முதலமைச்சர் விஜய்க்கும் சபாநாயகர் ஜால்ரா அடித்துக் கொண்டே இருந்தார்.

* முதலமைச்சர் பேசியதற்கு ஆதாரம் கிடையாது, அமலாக்கத்துறை, சர்காரியா ஆவணம் அனைத்தும் குற்றச்சாட்டு தான்.

* திமுக மீதான ஊழல் புகார் நிரூபிக்கப்பட்டதா, ஊழல் புகாரில் தண்டிக்கப்பட்டவர் யார் என்று உங்களுக்கே தெரியும்.

* திமுகவினர் மீது நீதிமன்றத்தில் வழக்கு நடக்கலாம், அவற்றை சட்டரீதியாக சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.

* மிசா பற்றி பேச முதலமைச்சருக்கு என்ன தகுதி இருக்கிறது. இவர் அரசியலுக்கு வந்தது ஒரு விபத்து.

* கோடி கோடியாக பணத்துடன் வந்து எந்த அமைச்சர் பதவி வேண்டும் எனக் கேட்டதாக IUML எம்எல்ஏ பேசியுள்ளார்.

* வெளிப்படையாக குதிரை பேரத்தில் தவெக அரசு ஈடுபடுகிறது என்றார்.

SCROLL FOR NEXT