தமிழக செய்திகள்

தவெக - பாஜக இடையே ரகசிய உடன்பாடு - உதயநிதி சாடல்

திமுக அரசின் சாதனைகள், கொள்கைகளை தான் தவெக ஸ்டிக்கர் ஒட்டி உள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17வது கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இன்று தொடங்கி, தமிழக ஆளுநர் அர்லேகர் உரையை வாசித்தார்.

தமிழ்நாடு அரசு கொடுத்த உரையை அப்படியே மாற்றமின்றி சட்டசபையில் ஆளுநர் அர்லேகர் வாசித்தார்.

கடந்த சில ஆண்டுகளாக அரசின் உரை வாசிக்கப்படாதது பேசுபொருளான நிலையில் புதிய ஆளுநர் உரையை அப்படியே வாசித்தார். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளை குறிப்பிட்டு தனது உரையை ஆளுநர் அர்லேகர் நிறைவு செய்தார்.

இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆளுநர் உரை குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* தவெக அரசு தயாரித்து கொடுத்த உரையை மாற்றாமல் அப்படியே ஆளுநர் வாசித்ததன் மூலம் பாஜக உடனான தொடர்பு தெரிகிறது.

* திமுக ஆட்சியில் அரசு எழுதி கொடுத்த எந்த உரையையும் ஆளுநர் படித்தது இல்லை.

* தவெக - பாஜக இடையே ரகசிய உடன்பாடு ஏற்பட்டுள்ளதோ என எண்ண தோன்றுகிறது.

* திமுக அரசின் சாதனைகள், கொள்கைகளை தான் தவெக ஸ்டிக்கர் ஒட்டி உள்ளது.

* மாநிலத்தை முன்னேற்ற என்னென்ன திட்டங்கள் என்று ஏதும் இல்லாமல் தவெக ஆட்சி குறித்த பெருமை மட்டுமே உரையில் இருந்தது.

* தவெக அரசின் தோல்வியை திமுக அரசின் மீது போட்டுள்ளனர்.

* திமுக ஆட்சி நிர்வாகம் சரியாக இல்லை எனில் திட்டங்களை எப்படி நிறைவேற்றி இருக்க முடியும்.

* திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவது போலத்தான் ஆளுநர் உரை இருந்தது. இது ஒரு காழ்ப்புணர்ச்சி உரை.

* தவெகவிற்கு என்று சொல்வதற்கு எந்த சாதனையும் இல்லை.

* தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்ற போகிறார்கள் என்பது இடம் பெறவில்லை.

* வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்கவே வெள்ளை அறிக்கை என்ற வெற்று அறிக்கை.

* தங்கம் தென்னரசு கேட்ட எந்த கேள்விகளுக்கும் தவெக அரசிடம் பதில் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.