தமிழக செய்திகள்

கலைஞர் காட்டிய வழியில் அயராது உழைப்போம் - உதயநிதி

கலைஞர் நினைவிடத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி கழகத் தொண்டர்களை கட்டிப்போட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் இன்று!

சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.

கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் அயராது உழைப்போம். மீண்டு எழுவோம் - மீண்டும் வெற்றிக் கொடி ஏற்றுவோம்!

ஓங்குக கலைஞர் புகழ்!

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT