உதயநிதி ஸ்டாலின் 
தமிழக செய்திகள்

நீட்டுக்கு எதிராக தி.மு.க. வாள் தூக்கி நிற்கும்- உதயநிதி ஸ்டாலின்

மாணவர்களின் போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்! என்று கூறியுள்ளார்.

போராட்டம் தீவிரம்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்துக்கு பொறுப்பேற்று மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

உண்மையான நோக்கம்!

இந்த நிலையில், தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஆங்கில நாளிதழுக்கு எழுதிய கட்டுரையை மேற்கொள்காட்டி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

நீட் தேர்வில் மட்டுமல்ல, #NEET தேர்வே மோசடிதான் என்பதை படம்பிடித்துக் காட்டுகிறது கழகத்தலைவர் மு.க.ஸ்டாலின்

அவர்களின் இன்றைய @the_hindu Op-Ed கட்டுரை!

ஏழை எளிய, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, கிராமப்புற, அரசுப்பள்ளி மாணவர்களின் மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக் கனவைச் சிதைப்பதே நீட் போன்ற நுழைவுத்தேர்வுகளின் உண்மையான நோக்கம்!

அந்தத் தடையை உடைப்பதற்கான படையாக திமுக என்றைக்கும் முன் வரிசையில் வாள் தூக்கி நிற்கும் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, மாணவர்கள் போராட்டம் தொடர்பாக மு.க.ஸ்டாலின் கூறியிருந்ததாவது:- தொடர்ந்து நடைபெற்று வரும் மாணவர்கள் போராட்டம் மத்திய அரசுக்கு ஒரு விழிப்புணர்வு அழைப்பாக அமைய வேண்டும். மாநிலங்களை நம்ப வேண்டிய நேரம் இது. நீட் தேர்வை ஒழிக்க வேண்டிய நேரம் இது என்று கூறியிருந்தார்.