தமிழக செய்திகள்

வள்ளலார் புகழ் ஓங்கட்டும்!- உதயநிதி ஸ்டாலின்

ஏற்றத்தாழ்வுக்கு எதிரான அறிவுத்தீயோடு - பசிப்பிணி போக்குவதற்கான பெருநெருப்பையும் ஏற்றியவர்.

வள்ளலார் பிறந்த நாளை ‘தனிப்பெருங்கருணை நாள்’ என தமிழக அரசு அறிவித்தது. சாதி, மதம், சாத்திரத்தை மறுத்து மானுடத்தை முன்னிறுத்திய வள்ளலார் புகழ், திராவிட மாடல் அரசின் பல்வேறு முயற்சிகளால் போற்றப்படுகிறது. வள்ளலார் புகழ் என்றும் ஓங்கட்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வள்ளலார் பிறந்தநாளை தமிழக அரசால் ‘தனிப்பெருங்கருணை நாள்’ என அறிவிக்கப்பட்டு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 5-ந்தேதி கடைப்பிடிக்கிறது. அந்த வகையில் இன்று வள்ளலார் பிறந்தநாளையொட்டி எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

அணையா ஒளியாய்

‘வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்’ என்று பாடிய வள்ளலார் இராமலிங்க அடிகளார் பிறந்த நாள் இன்று.

சாதி - மதம் - சாத்திரம் என்பதை மறுத்து மானுடத்தை முன்வைத்த புரட்சியாளர் - வள்ளலார்.

ஏற்றத்தாழ்வுக்கு எதிரான அறிவுத்தீயோடு - பசிப்பிணி போக்குவதற்கான பெருநெருப்பையும் ஏற்றியவர்.

வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெருங்கருணை நாளாக அறிவித்தது, அனைத்துலக வள்ளலார் மாநாடு, வள்ளலார் முப்பெரும் விழா, வள்ளலார் இல்லம் புனரமைப்பு, திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு வள்ளலார் பெயரைச் சூட்டியது என கழகத்தலைவர் அவர்கள் தலைமையிலான திராவிட மாடல் அரசு வள்ளலார் புகழைப் போற்றியது.

அணையா ஒளியாய் மக்கள் மனதில் வாழும் வள்ளலார் புகழ் ஓங்கட்டும்! என்று கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT