கிண்டியில் உள்ள மக்கள் பவனில் ஆளுநரை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், பெண் கலெக்டருக்கு ஆபாச செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ. மீது நடவடிக்கையை எடுக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள மக்கள் பவனில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
ஆளுநருடனான சந்திப்பின் போது, பெண் கலெக்டருக்கு கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ. ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் அருள் விக்னேஷை கைது செய்ய நடவடிக்கை வலியுறுத்தப்பட்டது. மேலும் புகாரளிக்க வந்தவரை தாக்கியதாக கூறப்படும் துணை சபாநாயகர் ரவிசங்கர் மீதும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி உதயநிதி ஸ்டாலின் மனு அளித்ததாக கூறப்படுகிறது.
நேற்று டி.ஜி.பி. அலுவலகத்தில் மனு அளித்த நிலையில் இன்று ஆளுநருடன் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.