அன்பில் மகேஷ்- உதயநிதி ஸ்டாலின் 
தமிழக செய்திகள்

புழல் சிறையில் 2-வது முறையாக அன்பில் மகேஷை சந்தித்தார் உதயநிதி

ஏற்கனவே கடந்த இரு தினங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் புழல் சிறைச்சாலை வந்து அன்பில் மகேஷை சந்தித்து சென்றார்.

தனியார் பள்ளி அனுமதி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட அன்பில் மகேஷை புழல் சிறையில் சந்திக்க வந்த உதயநிதி ஸ்டாலின், இரண்டாவது முறையாக அவரை நேரில் சந்தித்து உரையாடினார்.

தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்குவதற்கு பணம் வசூலித்ததாக பதியப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் இருந்து வரும் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை எதிர்க்கட்சித் தலைவரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் புழல் சிறைச்சாலைக்கு இன்று நேரில் சந்திக்க வருகை தந்துள்ளார்.

ஏற்கனவே கடந்த இரு தினங்களுக்கு முன்பு உதயநிதி ஸ்டாலின் புழல் சிறைச்சாலை வந்து அன்பில் மகேஷை சந்தித்து சென்றார்.

அதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது முறையாக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷை புழல் சிறைச்சாலைக்கு நேரில் வந்து உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். உடன் சேகர்பாபு உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளனர்.

SCROLL FOR NEXT