உதயநிதி ஸ்டாலின் 
தமிழக செய்திகள்

மருத்துவப் பணியாளர்கள் மீது அடக்குமுறை... ரீல்ஸ் அரசு அராஜகம் - Dummy முதலமைச்சர் பேசுவாரா? - உதயநிதி

ஜனநாயக வழியில் போராட்டம் செய்யும் எந்தப் பிரிவினரையும் நேரில் அழைத்துப் பேசாமல் அடக்குமுறையை ஏவுவதற்குப் பெயர் தான் மாற்றமா?

Reels அரசு மருத்துவப்பணியாளர்களின் போராட்டத்தை தடுக்க வீட்டுக்காவலில் வைக்கும் நடவடிக்கையை உதயநிதி ஸ்டாலின் கண்டித்து, ஜனநாயக உரிமைகளை மதித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

தேர்தல் முறைகேடுகளுக்கு எதிராக டெல்லிக்கு போராட செல்லும் இளைஞர்களை ஆங்காங்கே கைது செய்யும் ஓனர்களின் பாணியில்,

Reels அரசு

பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னைக்கு வந்து போராடவிருந்த பன்னோக்கு மருத்துவப்பணியாளர்களை ஆங்காங்கே வீட்டுக்காவலில் வைக்கும் இந்த Sofa Model அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மருத்துவப்பணியாளர்களுக்கு தந்த வாக்குறுதிகளை எல்லாம் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு போராட்டத்திற்குப் புறப்படும் முன்பே வீட்டில் வைத்து கைது செய்யும் அளவுக்கு இந்த Reels அரசு அராஜகம் செய்வது ஏன்?

விவசாயிகள் - மாணவர்கள் - செவிலியர்கள் என ஜனநாயக வழியில் போராட்டம் செய்யும் எந்தப் பிரிவினரையும் நேரில் அழைத்துப் பேசாமல் அடக்குமுறையை ஏவுவதற்குப் பெயர் தான் மாற்றமா?

மருத்துவப்பணிகளின் முதுகெலும்பாக இருக்கும் பன்னோக்கு பணியாளர்களை உடனே விடுதலை செய்து, அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த Dummy முதலமைச்சர் முன்வர வேண்டும்.

அவர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

SCROLL FOR NEXT