உதயநிதி ஸ்டாலின் 
தமிழக செய்திகள்

குரியன் ஜோசப் குழு கலைப்பு: Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார்- உதயநிதி ஸ்டாலின்

திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை கலைத்த தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ள உதயநிதி ஸ்டாலின், இது மாநில உரிமைகளுக்கு எதிரான துரோகம் என குற்றம்சாட்டியுள்ளார். திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை ரத்து செய்தது மாநில உரிமைகளை பாதிக்கும் நடவடிக்கையாக அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மத்திய, மாநில உறவுகள் பற்றி ஆராய தி.மு.க. ஆட்சியில் அமைக்கப்பட்ட குரியன் ஜோசப் தலைமையிலான குழுவை கலைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஒன்றிய - மாநில அரசுகளின் உறவுகளை ஆராய்வதற்காக நம் திராவிட மாடல் ஆட்சியில் அமைக்கப்பட்ட குழுவை இந்த சோப்ளாங்கி அரசு கலைத்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில், நிர்வாக - சட்ட மற்றும் பொருளாதார வல்லுநர்கள் இடம்பெற்றிருந்த இக்குழுவை கலைத்து இருப்பதன் மூலம் இந்த Dummy CM தமிழ்நாட்டுக்கு துரோகம் இழைத்துள்ளார்.

தமிழ்நாடு சட்ட ஆணையத்தின் பணிகளைக் காரணம் காட்டி, இந்தக்குழுவை ரத்து செய்திருக்கும் இவர்கள், மாநில உரிமைகளைப் பாதுகாக்க வேறென்ன திட்டம் வைத்திருக்கிறார்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

SCROLL FOR NEXT