உதயநிதி ஸ்டாலின் 
தமிழக செய்திகள்

தவெக அரசின் பட்ஜெட்டுக்கு '0' மார்க்- உதயநிதி ஸ்டாலின்

தவெக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிக பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி இல்லை.

மடிக்கணினி திட்டத்தை வெற்றி மடிக்கணினி திட்டம், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தை வெற்றி வீடு கட்டும் திட்டம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க அரசு இன்று 2026-27-ம் ஆண்டிற்கான நிதிநிலை பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்துள்ளது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலுக்கு பின் இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. இதனை தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-

திமுக ஆட்சி தான்

* த.வெ.க. அரசுக்கும் இன்று வெளியான பட்ஜெட்டிற்கும் மிகப்பெரிய பூஜ்ஜியம் மார்க்.

* தவெக வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவார்கள் என தகவல் இல்லை.

* மாற்றம் மாற்றம் என கூறும் தவெக அரசு திராவிட மாடல் கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்துள்ளது.

* திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர்.

* திமுக கொண்டு வந்த திட்டத்திற்கு பெயரை மாற்றுவதற்கு எதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்கள்?

* தேர்தல் வாக்குறுதியில் சொன்ன எதுவுமே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.

* இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம் என்கிறது பட்ஜெட். தமிழ்நாட்டை முதலிடத்துக்கு கொண்டு வந்தது திமுக ஆட்சி தான்.

* திமுக ஆட்சியின் சாதனையை ஒப்புக்கொண்ட நிதியமைச்சருக்கு திமுக சார்பில் நன்றி.

* ஒலிம்பிக் சிறப்பு மையம் என அனைத்தும் திமுக ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்கள் தான்.

* மடிக்கணினி திட்டத்தை வெற்றி மடிக்கணினி திட்டம், கலைஞர் வீடு கட்டும் திட்டத்தை வெற்றி வீடு கட்டும் திட்டம் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

* கல்விக்கான நிதியை தவெக அரசு குறைத்துள்ளது.

* ஆடிப்பெருக்கு நாளில் கூட காவிரியில் நீர் இன்றி செய்துள்ளது தவெக அரசு.

* 50 வருடங்களில் இல்லாத அளவிற்கு ஜூலை மாதத்தில் காவிரி நீர் வரத்து குறைந்தது.

* 5 வாரங்களில் 4 லாக்கப் மரணங்கள், 5 சாதி ஆணவ படுகொலைகள் நடந்துள்ளது.

* மேகதாது அணை கட்டுவதை தடுப்பதற்கு தவெக அரசுக்கு வக்கில்லை.

* தவெக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து அதிக பாதிப்புக்குள்ளாகும் விவசாயிகளுக்கு முழு பயிர்க்கடன் தள்ளுபடி இல்லை.

* பட்ஜெட் தாக்கலின் போது சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் என்ற பெயரில் நான் எந்த கேள்வியும் கேட்டுவிடக்கூடாது என்பதற்காகவே கைது நடவடிக்கை.

* விவசாயிகள் பிரச்சனைக்காக பேசிய என்னை கைது செய்து அலைக்கழித்ததை தமிழக மக்களே நேற்று பார்த்தனர். தவெக ஆட்சியின் பிரச்சனைகளை மடைமாற்றவே தன்னை காவல்துறை கைது செய்தது.

* என்னை மட்டுமல்ல திமுகவினர், திமுக GEN Z பிரிவினரையும் கைது செய்கின்றனர், அதிமுக எம்எல்ஏக்களை விலை பேசுகின்றனர்.

* மின்சாரம் வருவது பிரச்சனையாக இருந்த நிலையில், 3.5 லட்சம் மக்களுக்கு மின் கட்டணம் அதிகமாக வந்துள்ளது.

* நீட்டை எதிர்த்து நடவடிக்கை எடுக்காமல் போராடியோர் மீது தாக்குதல் நடத்துகிறது தவெக அரசு.

இவ்வாறு அவர் கூறினார்.