தமிழக செய்திகள்

வடலூரில் நாளை நடைபெற இருந்த உதயநிதி பிரசாரம் ஒத்திவைப்பு

உதயநிதி ஸ்டாலின் வேறு தேதியில் வடலூரில் பிரசாரம் செய்ய உள்ளார்.

கடலூர்:

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழகம் முழுவதும் பிரசாரம் செய்து வருகிறார். அவர் நாளை மாலை 4 மணிக்கு கடலூர் மாவட்டம் வடலூரில் பிரசாரம் செய்வதாக இருந்தது.

இந்த நிலையில் த.வெ.க. தலைவர் விஜய் நாளை கடலூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்ய உள்ளார். இதற்காக போலீஸ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விஜயும் வடலூரில் பிரசாரம் செய்ய இருக்கிறார். எனவே, ஒரே நாளில் 2 தலைவர்கள் பிரசாரத்தில் ஈடுபட இருந்த நிலையில் திடீரென துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அவர் வேறு தேதியில் வடலூரில் பிரசாரம் செய்ய உள்ளார்.