தமிழக செய்திகள்

100%.. ஆற்றல்மிகு எதிர்க்கட்சியாக இருப்போம் - எதிர்க்கட்சி தலைவர் ஆகும் உதயநிதி ஸ்டாலின் உறுதி

எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி

தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் இன்று பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் திமுக சட்டமன்ற குழு தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

துணை தலைவராக கே.என்.நேருவும், கொறடாவாக எ.வ.வேலுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் உதயநிதி ஸ்டாலின் சட்ட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ஆக உள்ளார்.

இந்நிலையில் உதயநிதி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், " தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.விஜய் அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.

இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி!

கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்றத்திலும் - மக்கள் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம்.

ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம். எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம். மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம்.

என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன்.

கடுமையாக உழைப்பேன்!" என்று தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT