தமிழக சட்டசபையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் 3 தமிழர்கள் படுகொலை குறித்து கேள்வி எழுப்பினார்.
தமிழக சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடந்து வருகிறது.
அப்போது எதிர்க்கட்சி தலைவரான உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
கர்நாடகாவில் வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழர்கள் சித்ரவதை செய்யப்பட்டு கொலை என கூராய்வு அறிக்கை.
உயிரிழந்த தமிழர்கள் உடலில் காயம் இருந்ததாக கூராய்வு அறிக்கை வந்துள்ளது.
தமிழக அமைச்சர்கள் யாராவது கர்நாடகா சென்றார்களா?
3 தமிழர்கள் கொலையில் அரசின் நிலைப்பாடு என்ன? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு சபாநாயகர், சட்டத்துறை அமைச்சர் நாளை விளக்கம் அளிப்பார் என தெரிவித்தார்.