சென்னை ஜாபர்கான்பேட்டை, பகுதியில் போதை மாத்திரை விற்பனை நடப்பதாக எம்.ஜி.ஆர் நகர் போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் சீனிவாசன் தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதி திருநகர் ஆற்றோர சாலையில் சந்தேகப்படும் படி சுற்றி திரிந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் அதே பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (19) மற்றும் பெசன்ட் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (23) என்பதும் கஞ்சா மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரிந்தது.
இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3500 போதை மாத்திரைகள் மற்றும் 1கிலோ 150கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான இருவரும் மும்பை மற்றும் ஆந்திராவுக்கு சென்று போதை மாத்திரை மற்றும் கஞ்சாவை மொத்தமாக வாங்கி வந்து அதை உறவினர் வீட்டில் பதுக்கி வைத்து நூதன முறையில் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஐ.டி நிறுவன ஊழியர்களை குறி வைத்து விற்று அதிக லாபம் சம்பாதித்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.