தமிழக செய்திகள்

அண்ணாசாலை, அயனாவரத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பெண்கள் கைது

அண்ணாசாலை மற்றும் அயனாவரம் பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வரும் நபர்களை காவல் குழுவினர் கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, D-2 அண்ணாசாலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று அண்ணாசாலை, பார்டர் தோட்டம், களிமண்புரம் அருகில் கண்காணித்து, சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த அமுலு என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 180 மி.லி.அளவு கொண்ட 34 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல, K-2 அயனாவரம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று அயனாவரம், பழனி ஆண்டவர் கோயில் தெருவில் கண்காணித்து, அங்கு சட்டவிரோதமாக பையில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்து கொண்டிருந்த ஜோதிபாய் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 180 மி.லி. அளவு கொண்ட 5 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT