தமிழக செய்திகள்

த.வெ.க.வில் இணையும் இரு விஜயபாஸ்கர்கள்... பிரம்மாண்டமாக நடைபெறும் இணைப்பு விழா

புதுக்கோட்டையில் இருந்து 200 பஸ்கள், 500 கார்கள் மூலம் தனது ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் வருகை தந்து த.வெ.க.வில் இணைய உள்ளதாக டாக்டர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க.வில் இருந்து எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜெயக்குமார் (பெருந்துறை), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), சத்தியபாமா (தாராபுரம்), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோர் த.வெ.க.வில் இணைந்தனர். அதேபோன்று எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ள டாக்டர் சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்) ஆகியோரும் த.வெ.க.வில் இணைய உள்ளனர்.

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நாளை காலை மணியளவில் இணைப்பு விழா நடைபெறுகிறது.

15 ஆயிரம் பேருடன்...

புதுக்கோட்டையில் இருந்து 200 பஸ்கள், 500 கார்கள் மூலம் தனது ஆதரவாளர்கள் 15 ஆயிரம் பேருடன் வருகை தந்து த.வெ.க.வில் இணைய உள்ளதாக டாக்டர் விஜயபாஸ்கர் தகவல் தெரிவித்துள்ளார். அதேபோன்று எம்.ஆர். விஜயபாஸ்கரும் தனது ஆதரவாளர்களுடன் இணைகிறார்.

இவர்கள் 2 பேருடன் புதுக்கோட்டை, கரூர், திருச்சி, தஞ்சை, பெரம்பலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அ.தி.மு.க.வை சேர்ந்த 3 முன்னாள் அமைச்சர்கள், 10 முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், 8 மாவட்ட செயலாளர்கள், 250 பொதுக்குழு உறுப்பினர்களும், சட்டமன்ற, பாராளுமன்ற தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட்டவர்கள் என பலரும் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

SCROLL FOR NEXT