தமிழக செய்திகள்

ஆட்டோவில் வந்து மோட்டார் சைக்கிள் திருடிய 2 சிறுவர்கள் கைது

போலீசார் தீவிர விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாக குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்களை கைது செய்தனர்.

பொன்னேரி அடுத்த ஆமுரை சேர்ந்தவர் முகமது ஆசிப். சமையல் மாஸ்டர். இவரது மோட்டார் சைக்கிள் பொன்னேரி ஜீவா தெருவில் நிறுத்தி இருந்தபோது திருடுபோனது.

கைது

இது தொடர்பாக பொன்னேரி இன்ஸ்பெக்டர் சிவகுமார் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டதாக குன்றத்தூர் பகுதியைச் சேர்ந்த 16, 17 வயதுடைய 2 சிறுவர்களை கைது செய்தனர்.

அவர்கள் ஆட்டோவில் வந்து மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரிய வந்தது.

SCROLL FOR NEXT