தமிழ்நாடு போலீஸ்
தமிழக செய்திகள்

பணியின்போது ஒழுங்கீனம்: இரண்டு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் பணி நீக்கம்

புகார் அளிக்க வந்த பெண்ணுக்கு வாட்ஸ்அப்பில் அபாச குறுந்தகவல்.

பணியின்போது ஒழுங்கீனமாக செயல்பட்ட திண்டுக்கல் மாவட்டத்தைச்சேர்ந்த இன்ஸ்பெக்டர் மற்றும் இன்ஸ்பெக்டரை பணி நீக்கம் செய்து தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை, பெண்கள் பாதுகாப்பு. போக்சோ வழக்குகள் போன்றவற்றில் முறையாக விசாரணை நடத்தாத போலீஸ் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி பணியின்போது ஒழுங்கீனமாக இருந்த 2 போலீஸ் அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர் கோபால். இவர் போலீஸ் நிலையத்துக்கு புகார் அளிக்க வந்த ஒரு பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கிக் கொண்டு அவருக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியுள்ளார்.

மேலும் அவர் பாலியல் தொல்லை கொடுத்த உரையாடல்களை வைத்து மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்தியதில் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியாகவே கடந்த மே மாதம் 24-ந்தேதி சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்நிலையில் அவரை பணி நீக்கம் செய்து தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார்.

இன்ஸ்பெக்டர் கவுதமன்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் கவுதமன். இவர் தூத்துக்குடி மாவட்டத்தில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த போது புகாரை முறையாக கையாளாமல் அலட்சியமாக செயல்பட்டது. தெரிய வந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்தியதில் அவர் மீதான புகார் உறுதியானது. இதனைத் தொடர்ந்து இன்ஸ்பெக்டர் கவுதமனையும் கட்டாய பணி நீக்கம் செய்து தென் மண்டல ஐ.ஜி. உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே தூத்துக்குடியில் பணியின் போது அலட்சியமாக இருந்த இன்ஸ்பெக்டர் பணி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் அடுத்தடுத்து மேலும் 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளது போலீஸ் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இன்ஸ்பெக்டர் திலீபன்

நாகர்கோவில் அருகே உள்ள சொத்தவிளையை சேர்ந்தவர் திலீபன். தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பணியாற்றி வந்தார். இவர் கடந்த 2023-24 ஆண்டில் குமரி மாவட்டம் அருமனை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றினார்.

அப்போதும் சென்னை பொருளாதார குற்றப்பிரிவில் அயற்பணியில் இருந்த நேரத்திலும் எந்தவித முன் அனுமதியுமின்றி 555 நாட்கள் பணிக்கு வராமல் இருந்ததாகவும், மருத்துவ குழுவின் முன் ஆஜராகாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இது தொடர்பான துறைரீதியான விசாரணையின் போதும் உரிய ஒத்துழைப்பு விளக்க அளிக்காமல், கடிதம் சமர்ப்பிக்காமலும் இருந்து வந்துள்ளார். இந்த செயலுக்காக இன்ஸ்பெக்டர் திலீபனை பணியில் இருந்து விடுவித்து நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. திருநாவுக்கரசு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பணியில் இருந்து நீக்கப்பட்ட திலீபன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆறுமுகநேரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றியபோது, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை பெண் காவலர் ஒருவருக்கு வாட்ஸ்-அப் மூலமாக பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும் புகார் எழுந்தது.

அந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு அப்போதைய நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக இருந்த தேஷ்முக் சஞ்சய், இன்ஸ்பெக்டர் திலீபனை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் தற்போது அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள சம்பவம் காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

SCROLL FOR NEXT