விசாரணையில் அவர்கள் திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த தனசேகர்(22), சென்னை புளியந்தோப்பை சேர்ந்த குணால்(23) என்பது தெரிந்தது.
ஊரப்பாக்கம், கோலாட்சி அம்மன் கோவில் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் அரவிந்த். என்ஜினீயர்.கடந்த 8-ந் தேதி இரவு இவரது வீட்டு முன்பு நிறுத்தி இருந்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளில் பொருத்தப்பட்டு இருந்த சென்சார் தொழில் நுட்பம் மூலம் அந்த வண்டியை சிங்கப்பெருமாள்கோவில் அருகே மர்மநபர்கள் ஓட்டி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து விரைந்து சென்ற போலீசார் அவர்கள் 2 பேரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் திருமுல்லைவாயில் பகுதியை சேர்ந்த தனசேகர்(22), சென்னை புளியந்தோப்பை சேர்ந்த குணால்(23) என்பது தெரிந்தது.