தமிழக செய்திகள்

ஆயிரத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசம்: த.வெ.க. கைப்பற்றிய மற்றும் இழந்த தொகுதிகள் விவரம்

திருப்பத்தூர், போளூர், கும்பகோணம், கள்ளக்குறிச்சி, கம்பம் ஆகிய 5 தொகுதியில் ஆயிரத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளர்கள் வெற்றியை ருசித்தனர்.

தமிழக சட்டசபை தேர்தலில் த.வெ.க. தனியாக அதிக இடங்களை பிடித்தாலும், ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை பிடிக்க முடியாமல் போனது. இந்த தேர்தலில் த.வெ.க., தி.மு.க., அதிமுக இடையில் கடும் போட்டி நிலவியது என்றே சொல்லலாம்.

விஜய் வாக்குகளை மட்டுமே பிரிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 35 சதவீத வாக்குகளுடன் 108 இடங்களை பிடித்து ஆச்சர்யப்படுத்தினார்.

இந்த தேர்தலில் பலர் மிகவும் குறைந்த வாக்குகளில் வெற்றியை பெற்றனர். வெற்றியை நழுவவிட்டனர். இது திமுக- அதிமுக, தவெ.க.- அதிமுக, த.வெ.க.- திமுக வேட்பாளர்களிடையே நிகழ்ந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் திமுக அமைச்சர் பெரியகருப்பண் ஒரு வாக்கு வித்தியாசத்தில் த.வெ.க. வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.

த.வெ.க.-வைச் சேர்ந்த வேட்பாளர்கள் கோவில்பட்டி, குளித்தலை, பழனி, திருக்கோவிலூர், உதகை, விக்கிரவாண்டி ஆகிய 6 தொகுதியில் ஆயிரத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தனர்.

அதேவேளையில் திருப்பத்தூர், போளூர், கும்பகோணம், கள்ளக்குறிச்சி, கம்பம் ஆகிய 5 தொகுதியில் ஆயிரத்திற்கும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தனர்.