திருப்பூரின் பெருமாநல்லூர் பகுதியில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கை நாளை மறுதினம் புத்தகமாக வெளியிடப்படுகிறது.
நெசவாளர் பொருட்களை வெளிநாடுகளில் சந்தைப்படுத்த இ-காமர்ஸ் தளம் உருவாக்கப்படும்.
கைத்தறி வைத்திருக்கும் நெசவாளர் குடும்பங்களுக்கு ரூ.30,000 வங்கிகளில் செலுத்தப்படும்.
நெசவாளர் முதியோர் ஓய்வூதியம் ரூ.3000 உயர்த்தப்படும்.
நெசவாளர் உற்பத்தி செலவைக் குறைக்க நூல், சாயம் உள்ளிட்டவற்றுக்கு 50 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
நெசவாளர்களுக்கு அரசு சார்பில் ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும்.
விவசாயிகளுக்கு மின்கட்டணம் முறைப்படுத்தப்படும்.
5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு வேளாண் கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது குறித்து தவெக அரசு கனிவுடன் பரிசீலிக்கும்.
பதவி உயர்வுக்கு பணம் பெறும் கலாசாரம் முடிவுக்கு கொண்டு வரப்படும்.
காவலர் அடிப்படை மாத ஊதியம் ரூ.25,000 ஆக உயர்த்தப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தார்.
மக்கள் அனைவரும் என்னை நம்பலாம். பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்ற மாட்டேன் என்றார்.