இந்தியா கூட்டணியில் இணைந்து வரும் 2029ம் ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை தவெக சந்திக்கும் என அமைச்சர் ஷாஜகான் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
இதுகுறித்து நெல்லையில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
இந்தியா கூட்டணியில் இணைந்து வரும் 2029ம் ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலை தவெக சந்திக்கும்.
திமுகவை இத்தனை ஆண்டுகாலம் பல்லக்கில் தூக்கி சுமந்த கட்சி இந்திய யூனியன் முஸ்லீம் லீக்.
திமுகவுடன் நீண்ட கால அரசியல் பயணம் செய்தோம், தற்போது ஏற்பட்ட அரசியல் சூழல் அடிப்படையில் தவெக அமைச்சரவையில் உள்ளோம்.
தவெக அரசில் இந்திய யூனியன் முஸ்லீம்லீக் பங்கேற்றுள்ளதை திமுகாவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அரசியல் முடிவு என்பது மக்கள் நலனை அடிப்படையாக கொண்டது.
தவெக இந்தியா கூட்டணியில் இணைவது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
திமுகவின் நிலைப்பாடு குறித்து அக்கட்சியின் தலைமைதான் முடிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.