தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு தருவது தொடர்பாக, நாளை நடைபெறவிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கலந்தாய்வு கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைக்கத் தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெறாத நிலையில், பிற கட்சிகளிடம் ஆதரவு கோரி வருகிறது.
காங்கிரஸ் , திமுக உடனான தனது நீண்டகாலக் கூட்டணியை முறித்துக் கொண்டு, விஜய் தலைமையிலான தவெக ஆட்சியமைக்க நிபந்தனையுடன் கூடிய ஆதரவை அறிவித்துள்ளது.
இருப்பினும் இன்னும் 6 உறுப்பினர்கள் தேவைப்படுவதால், விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளிடமும் ஆதரவுக் கோரியுள்ளது.
இந்நிலையில் இதுதொடர்பாக நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து அறிவிக்கப்படும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறவிருந்த நிலையில், நாளை மறுநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 8ஆம் தேதி கூட்டம் நடத்துவதால் அன்றைய தினமே விசிக கூட்டம் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.