த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசும் போது, நடிகர் ரஜினிகாந்த் தி.மு.க. மிரட்டலால் தான் அரசியலுக்கு வரவில்லை என்று கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்திற்கு அரசியல் தலைவர்கள் தொடங்கி திரைத்துறையினர் வரை பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
பெரும் புயலை கிளப்பிய இந்த விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் இன்று (மார்ச் 17) அறிக்கை ஒன்றை வெளியிட்டு, "தனக்கு இந்த விவகாரத்தில் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டு காலம் பேசாது, ஆனால் காத்திருந்து பதில் சொல்லும்," என்று தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், கொளத்தூரில் இன்று நடைபெற்ற த.வெ.க. பொதுக்கூட்டத்தில் அக்கட்சி நிர்வாகியும், ரஜினி ரசிகருமான அசோக் பேசும் போது, "ரஜினிகாந்த் பற்றி த.வெ.க.வில் யார் எது பேசினாலும், நான் கேள்வி கேட்பேன். ரஜினியை பற்றி நீங்கள் பேசியது குறித்து மேடையில் விளக்கம் கொடுக்க வேண்டும். நான் இன்று நல்ல நிலைமையில் நேர்மையாக இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் ரஜினிகாந்த்," என்று தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது.