அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
* இன்றைக்கு ஆட்சியாளர்கள் இருக்கிறார்கள். விபத்துல ஆட்சிக்கு வந்துட்டாங்க.
* ஆட்சிக்கு வந்ததில் இருந்து தலைகால் புரியாமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்ன பேசுவதென்றே தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
* ஏற்கனவே அ.தி.மு.க. ஆட்சியில் அறிவித்த திட்டத்திற்கு பெயரை மாற்றி வைத்திருக்கிறார்கள். அதிமுக திட்டத்திற்கு வெற்றி என பெயரை சூட்டி மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், திட்டத்தை கொண்டு வந்தது அதிமுக.
* அம்மா சிந்தனையில் உதித்த அருமையான திட்டம் தாலிக்கு தங்கம் திட்டம். இந்த திட்டத்தை பெயர் மாற்றியிருக்கிறார்கள். இன்னும் தொடங்கப்படல.
* தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம். பாவம், பிறந்த குழந்தையை ஏமாற்றும் அளவிற்கு ஆயிட்டாங்க. ஒரு கிராம். ஏழைகளுக்கு போடுவதில் தவறு இல்லை. அந்த திட்டத்திற்கு எவ்வளவு வடிவமைப்பு கொடுக்கிறார்கள் பாருங்க.
* ஒரு ரூபாய் செலவு செய்துவிட்டு, ஒரு லட்சம் ரூபாய்க்கு விளம்பரம் செய்றாங்க.
* த.வெ.க. கட்சியின் மூலதனமே ரீல்ஸ்.., ரீல்.., இதை வைச்சிக்கிட்டு ஆட்சிக்கு வந்துட்டாங்க.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.