தமிழக சட்டசபையில் முதன்முறையாக பேசிய பல்லவி தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.
தமிழ்நாடு சட்டசபையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் திரு.வி.க.நகர் த.வெ.க. எம்.எல்.ஏ. பல்லவி பேசியதாவது:-
* போதைப்பொருள் புழக்கம் முக்கிய பிரச்சனையாக உள்ளது.
* பூங்கா கட்டுவதை மட்டுமே முந்தைய எம்எல்ஏக்கள் செய்து கொண்டிருந்தனர்.
* மேயரும் அமைச்சரும் எனது தொகுதியில் தான் இருக்கிறார்கள்.
* வடசென்னையில் குடிநீர் குழாயில் கழிவுநீர் கலந்து வருகிறது. எங்கள் தொகுதி மக்களுக்கு தூய்மையான குடிநீர் வேண்டும்.
* வடசென்னையில் பள்ளி மாணவர்கள் போதைப்புழக்கத்தில் அதிகம் பாதிக்கிறார்கள். இதை தடுக்க வேண்டும்.
* போதைப்பொருள் புழக்கம் அதிகமுள்ள இடங்களில் விளையாட்டு, திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்.
* இதுவரை எத்தனையோ எம்எல்ஏ வந்தார்கள். எங்கள் தொகுதி மாறவில்லை, மாற்றம் கொண்டு வரும் வகையில் செயல்படுவேன்.
* என்னை பின்பற்றி என் தொகுதி மக்கள் வருவார்கள், நான் இல்லாமல் போனாலும் தொகுதிக்கு நல்லது நடக்க வேண்டும் என்றார்.
இதனிடையே, சட்டசபையில் முதன்முறையாக பேசிய பல்லவி தவறாக பேசியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள் என்று கூறினார்.