சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு முன்பு எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதையடுத்து பிரசாரத்தின்போது அவர் கூறியதாவது:
* கேஸ் பிரச்சனை எப்படி இருக்கிறது? பிரச்சனை சரி ஆகி விட்டதா? இதனால் எத்தனை பிரச்சனைகள்?
* சமையல் எரிவாயு இல்லாததால் எவ்வளவு டீ கடைகள், உணவகங்கள் மூடப்பட்டுள்ளது.
* மத்திய, மாநில அரசுகள் கொஞ்சம் உஷாராக இருந்திருந்தால் கேஸ் பிரச்சனை பெரிய அளவில் இல்லாமல் இருந்திருக்கும்.
* ஸ்டாலின் சாரை கேட்டால் நமக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை எனக்கூறுவார், இதற்காக டெல்லி சென்றிருக்கலாமே?
* கேஸ் மானியம், வேலைவாய்ப்பு, நீட் ரத்து இவை அனைத்தும் என்னாச்சு?
* இப்போது அடுத்தகட்ட பொய் வாக்குறுதிகளுடன் முதல்வர் ரெடியாகி விட்டார்.
* பொய் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றுவது தான் மு.க.ஸ்டாலினின் வேலை.
* திமுக போல் வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றாமல் தவெக கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றும்.
* கல்வி, போக்குவரத்து, மருத்துவம் போன்ற அடிப்படை வசதிகளில் தான் எங்கள் கவனம் இருக்கும்.
* கழிவறை இல்லாததால் காட்டுப்பக்கம் ஒதுங்கிய பள்ளி சிறுமியின் நிலை என்னாச்சு?
* திருச்சியில் ஒரு மந்திரி இருக்கிறார், நகராட்சி துறையில் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி உள்ளார்.
* நகராட்சி துறையில் வேலை வாங்கி வருவதாக கூறி லஞ்சம் பெற்று ஏமாற்றி உள்ளார் ஒரு அமைச்சர்.
* கோடி கோடியாய் லஞ்சம் வாங்கும் இந்த அமைச்சர் உள்ளிட்ட திமுகவினரை தூக்கி எறிந்து விடுவோமா?
* 2000 கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கு பணி வழங்குவோம் எனக்கூறினர் 5 பேருக்கு மட்டுமே பணி வழங்கினர்.
இவ்வாறு அவர் கூறினார்.