தமிழக செய்திகள்

புதுச்சேரியை போல தமிழகத்தில் வாக்குப்பதிவு நடக்குதா இல்லையா என பாருங்கள்: த.வெ.க. தலைவர் விஜய்

எங்கடா போனீங்க. கடுப்ல விட்ட கணிப்பார்களே. 60 வயதிற்கு மேற்பட்ட தாத்தா, பாட்டி, அம்மாக்கள் எங்கள் வீட்டு விஜய், எங்கள் வீட்டு விஜி எனச் சொல்வது காதில் விழவில்லையா? என விஜய் கேட்டுள்ளார்.

கருத்துக் கணிப்பு வேற. சும்மா அடித்து விடுறாங்க. 40 வயதிற்கு உட்பட்டவர்கள்தான் விஜய்க்கு ஓட்டு போடுவார்களாம். 50 வயதிற்கு உட்பட்டவர்கள் போனா போகுது வாக்களிப்பார்களாம். 40 வயதிற்கு உட்பட்ட வாக்களார்கள் குறைவாம்.

50 வயது முதல் 80 வயது வாக்களார்கள் அதைவிட அதிகமாம். ஆனா, அவர்கள் விஜய்க்கு ஓட்டு போடமாட்டார்களாம். இப்படி பில்டப் மேல பில்டப். இவர்கள் மண்டையில நுறுக்கென கொட்டுற மாதிரி, தேர்தல் ஆணையம் விரிவான ரிப்போர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் 40 வயதிற்கு உள்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 2.37 கோடி. 50 வயதிற்கு உட்பட்டவர்களை சேர்த்துக் கொண்டால் சுமார் 3.65 கோடி. இதில் நம்முடைய அக்கா, தங்கைகள் மட்டுமே 1.77 கோடி.

எங்கடா போனீங்க. கடுப்ல விட்ட கணிப்பார்களே. 60 வயதிற்கு மேற்பட்ட தாத்தா, பாட்டி, அம்மாக்கள் எங்கள் வீட்டு விஜய், எங்கள் வீட்டு விஜி எனச் சொல்வது காதில் விழவில்லையா? இந்த உண்மையெல்லாம் வெளியில் சொல்லி விடாதீர்கள் என்று நல்லா கவனித்து அனுப்பினார்களோ?. கருத்து கணிப்பு, கடுப்ல விட்ட கணிப்பு எந்த கணிப்பை விட்டாலும் திமுக மற்றும் பலர் மண்ணைக் கவ்வப்போவது உறுதி.

லஞ்ச கனவு, ஊழல் கனவு, கொள்ளையடிக்கிற கனவு எல்லாம் கதம் கதம்தான். புதுச்சேரியில் ஏறத்தாழ 90 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. விட்டா 100 சதவீதம் நடந்திருக்கும். அதேமாதிரி தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடக்குதா இல்லையா என்று பாருங்கள்.

அதனால, மக்களே கையெடுத்து கும்பிட்டு கேட்கிறேன். பூத்துக்கு சென்று ஸ்டாலின் சாரிடம் இருந்து மக்களை காப்பாற்றி ஆக வேண்டும். ஜனநாயகத்தை காப்பாற்றி ஆகனும். என்ன பிசியாக இருந்தாலும், என்ன வேலையாக இருந்தாலும், வெளியூரில் இருந்தாலும் எந்த பூத்தில் எங்கள் வாக்கு உள்ளதோ, அங்கு வந்து விசில் சின்னத்திற்கு வாக்களியுங்கள். தயவு செய்து உங்கள் விஜய்க்கு ஒரு வாய்ப்பு கொடுங்க.

வெளிநாட்டில் இருந்து வாக்களிக்க வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.