தமிழக செய்திகள்

நீலாங்கரையில் இருந்து கான்வாய் பாதுகாப்பு வாகனங்களுடன் புறப்பட்டார் த.வெ.க. தலைவர் விஜய்

த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்பதை தொடர்ந்து தொண்டர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் குவிந்து வருகின்றனர்.

சென்னை நீலாங்கரையில் இருந்து பதவியேற்பு விழாவிற்கு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் புறப்பட்டார். இன்று காலை 10 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் விழாவில் கவர்னர் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக முழு முதலமைச்சராக்கான வாகன அணிவகுப்பு பாதுகாப்புடன் நீலாங்கரை இல்லத்தில் இருந்து தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் புறப்பட்டார்.

த.வெ.க. தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்பதை தொடர்ந்து தொண்டர்கள் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் குவிந்து வருகின்றனர். மேலும் அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.