தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியது முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், திரைப்பிரபலங்கள் என பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
11 மணிநேரமாக தொடர்ந்து நடைபெற்ற வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
வாக்குப்பதிவு நிறைவுப்பெற்றதும் மின்னணு வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்டன.
இந்த நிலையில், 8 மணி நிலவரப்படி தமிழகத்தில் 85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. இதில், கரூரில் அதிகபட்சமாக 91.78 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இந்த தேர்தலில் தவெக சார்பில் முதல்வர் வேட்பாளராக விஜய் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். ஒன்று பெரம்பூர் தொகுதி மற்றும் திருச்சி கிழக்கு.
இந்த இரண்டு தொகுதிகளிலும் இதுவரை பதிவான வாக்கு சதவீதம் குறித்து பார்க்கலாம்.
அதன்படி, இன்றைய தேர்தலில் இதுவரை பெரம்பூர் தொகுதியில் 89.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதேபோல், திருச்சி கிழக்கு தொகுதியில் 81.77 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.