தமிழக செய்திகள்

நீலாங்கரையில் வாக்களித்தார் தவெக தலைவர் விஜய்

அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

காலையிலேயே வரிசையில் நின்று மக்கள் தங்கள் ஜனநாயக கடமையாற்றி வருகின்றனர். அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் வாக்குச்சாவடியில் வரிசையில் நின்று தங்களது வாக்கை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நீலாங்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளியில் தவெக தலைவர் விஜய் வாக்களித்தார்.

தமிழக அரசியலில் களமிறங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனது வாக்கினை செலுத்தினார்.

இதுவரை நடிகராக தனது வாக்கினை செலுத்திய விஜய் முதன்முறையக முதல்வர் வேட்பாளராக தனது வாக்கினை செலுத்தினார்.

வாக்களித்த பின்பு வாக்குச்சாவடியில் உள்ள அனைவருக்கும் விஜய் நன்றி தெரிவித்துவிட்டு சென்றார்.