தமிழக செய்திகள்

நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க ஆளுநரிடம் நேரம் கேட்டார் த.வெ.க. தலைவர் விஜய்

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 120 தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுடன் ஆளுநரை 4-வது முறையாக சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல். ஆதரவு அளித்துள்ளதால் ஆட்சி அமைப்பதற்கான 118 இடங்களை தாண்டி 120 இடங்கள் கிடைத்துள்ளன. இதனைத் தொடர்ந்து இன்று இரவு 4-வது முறையாக ஆளுநர் அர்லேகரை சந்தித்து, ஆதரவு கடிதங்களை வழங்கி ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்கக்கோரி அழைப்பு விடுத்தார்.

அப்போது நாளை மாலை 3 மணிக்கு பதவி ஏற்க விஜய் நேரம் கேட்டுள்ளார். ஆளுநர் இந்த நேரத்திற்கு சம்மதம் தெரிவித்தால் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்பார். அவருடன் சில அமைச்சர்களும் பதவி ஏற்க வாய்ப்புள்ளது.