தமிழக செய்திகள்

கட்சியில் இணைந்த 1 மணிநேரத்தில் 15 பேருக்கு துணைப் பொதுச்செயலாளர் பதவி - தவெக தலைவர் விஜய் அறிவிப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தவர்களுக்கு பதவி.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான விஜய், கட்சிக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் 15 பேரை புதிய துணைப் பொதுச்செயலாளர்களாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர்களுக்குப் பதவி

இதில் 11 பேர் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் ஆவர்.

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முக்கியப் பிரமுகர்களான கடம்பூர் ராஜு, வெல்லமண்டி நடராஜன், MSM ஆனந்தன், வைகைச்செல்வன், வளர்மதி, எம்.சி. சம்பத், கே. ராதாகிருஷ்ணன், கே.வி. ராமலிங்கம், கே.டி. பச்சை மால், என்.ஆர். சிவபதி, எம்.ஆனந்தன் உள்ளிட்ட 11 முன்னாள் அமைச்சர்களும், சந்தீப் ஆனந்த், முத்து வெங்கடேஸ்வரன், தொள்ளமூர் கண்ணன், குமரன் ஆகியோர் என 15 பேருக்கு இந்தத் துணைப் பொதுச்செயலாளர் பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அமைப்பு விரிவாக்கம்

மேலும், முன்னாள் எம்பி சி. மகேந்திரன் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதியை உள்ளடக்கிய திருப்பூர் புறநகர் தெற்கு மாவட்டக் கழகம் உருவாக்கப்பட்டு அதற்கு மாவட்ட கழகச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலில்

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இந்த நிர்வாகிகள் அனைவரும் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த்தின் நேரடி வழிகாட்டுதலின் கீழ் செயல்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT