தமிழக செய்திகள்

த.வெ.க. அரசுக்கு ஆதரவு- சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி கூட்டாக அறிவிப்பு

அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவர் எஸ்.பி.வேலுமணி, கொறடாவாக விஜயபாஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை:

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

* அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என்ற நோக்கமே எங்களுக்கு கிடையாது. தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது.

* அ.தி.மு.க.வை பிளவுப்படுத்தும் நோக்கம் எங்களுக்கு கிடையாது. தொடர் தோல்வியால் இந்த முடிவை எடுத்திருக்கிறோம்.

* தேர்தலுக்கு பின் அதிமுக எந்த கூட்டணியிலும் இல்லை.

* அ.தி.மு.க. பொதுக்குழுவை எடப்பாடி பழனிசாமி கூட்டுவார், கூட்ட வேண்டும்.

* அ.தி.மு.க. சட்டமன்ற குழு தலைவர் எஸ்.பி.வேலுமணி, கொறடாவாக விஜயபாஸ்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

* அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உடைவதற்கு நாங்கள் காரணமாக இருக்க மாட்டோம்.

* திமுக ஆதரவோடு ஆட்சியமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விரும்பினார்.

* எடப்பாடி பழனிசாமி கூறிய முடிவை கேட்டு பேரதிர்ச்சிக்குள்ளானோம். திமுக வை எதிர்த்து தொடங்கப்பட்ட இயக்கம் அதிமுக.

* தி.மு.க.வுடன் இணையக்கூடாது என்றோம். அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை.

* எங்கள் கோரிக்கையை எடப்பாடி பழனிசாமி புரிந்து கொள்ள வேண்டும்.

* தமிழக வெற்றிக்கழகத்தை ஆதரிப்பது என அதிமுக பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் முடிவு என்றனர்.