தமிழக செய்திகள்

பொக்லைன் ஆபரேட்டருக்கு மிரட்டல் விடுத்த தவெக நிர்வாகி நீக்கம்

ஜெய் கிருஷ்ணனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி தமிழக வெற்றிக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தாம்பரத்தை சேர்ந்த தமிழக வெற்றிக்கழக மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ஜெய் கிருஷ்ணன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

பொக்லைன் ஆபரேட்டர் அழகுதுரையை தாக்கிய ஜெய் கிருஷ்ணனை தவெகவில் இருந்து கட்சி தலைமை நீக்கி உள்ளது.

ஜெய் கிருஷ்ணனை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கி தமிழக வெற்றிக்கழகம் உத்தரவிட்டுள்ளது.

கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யார் நடந்து கொண்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு வடமேற்கு மாவட்ட செயலாளரும் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சருமான சரத்குமார் தமிழக வெற்றிக் கழகத்தின் உரிய ஒப்புதலுடன் அதிரடி உத்தரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.