தமிழக செய்திகள்

த.வெ.க நிர்வாகி வெட்டிக்கொலை- இருவர் கைது

இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிவகங்கை ரெயில் நிலையம் அருகே உள்ள டாஸ்மாக் கடையில் தவெக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தவெக கிளை செயலாளர் நவீன் மர்ம நபர்களால் வெட்டிக்கொல்லப்பட்ட நிலையில் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முன்விரோதம் காரணமாக நவீன் கொல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் மதன்ராஜ், சரவணன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

SCROLL FOR NEXT