தமிழ்நாடு செய்திகள்

த.வெ.க மாநாடு- அனுமதி கேட்டு மீண்டும் மனு தாக்கல்

அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை பகுதியில் மாநாடு நடத்த திட்டம்.விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார்.

மாலை மலர்

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு தொடர்பாக, மீண்டும் அனுமதி கேட் விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தவெக மாநாட்டுக்கு அனுமதி கேட்டு விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார்.

அக்டோபர் 27ம் தேதி விக்கிரவாண்டி அடுத்துள்ள வி.சாலை பகுதியில் மாநாடு நடத்த திட்டமிட்டு அனுமதி, பாதுகாப்பு கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மாநாட்டிற்கான அறிவிப்பை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், நேற்று வெளியிட்டிருந்த நிலையில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.