தமிழக செய்திகள்

Vijay | பட்டு வேட்டி சட்டையில் திருச்செந்தூர் புறப்பட்டார் விஜய்

மதுரையில் இருந்து சாலை மார்க்கமாக திருச்செந்தூர் செல்லும் விஜய் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் இன்று (ஏப்ரல் 28) திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதற்காக தனி விமானம் மூலம் மதுரை செல்லும் விஜய், இன்று நள்ளிரவு மதுரையில் தங்குகிறார்.

பிறகு சாலை மார்க்கமாக திருச்செந்தூர் புறப்படுகிறார். திருச்செந்தூர் பயணத்தை ஒட்டி த.வெ.க. தலைவர் விஜய் சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். இங்கிருந்து தனி விமானம் மூலம் விஜய் மதுரைக்கு செல்கிறார். பட்டு வேட்டி சட்டை அணிந்தபடி விமான நிலையம் வந்த விஜய் மதுரைக்கு புறப்பட்டார்.

மதுரையில் இருந்து திருச்செந்தூர் பயணிக்கும் விஜய் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய உள்ளார். கட்சி தொடங்கிய பிறகு ஆன்மீகத் தலங்களுக்கு அவர் செல்வது அக்கட்சியினர் இடையே முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக விஜயின் வருகையை ஒட்டி மதுரை விமான நிலையத்தில் த.வெ.க. கட்சியினர் ஏராளமானோர் குவிந்துள்ளனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வலம் வருகின்றன.