தமிழக செய்திகள்

த.வெ.க. அமைச்சரவை உத்தேச பட்டியல்..!

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய்க்கு ஆளுநர் அர்லேகர் நாளை முதலமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் ஆளுநர் அர்லேகரிடம் ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டியை சமர்பித்ததால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்துள்ளார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை காலை 10 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. விஜய் உடன் 9 பேர் அமைச்சராக பதவி ஏற்பார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அமைச்சரவை உத்ததேச பட்டியல் வெளியாகியுள்ளது.

முதலமைச்சர் விஜய் பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறையை வைத்துக் கொள்வார் எனத் தெரிகிறது.

1. செங்கோட்டையனுக்கு பொதுப்பணித்துறை,

2. என். ஆனந்திற்கு நகராட்சி நிர்வாகத்துறை,

3. சி.டி.ஆர். நிர்மல்குமாருக்கு மின்சாரத்துறை,

4. ஆதவ் அர்ஜுனாவுக்கு விளையாட்டு மற்றும் மது விலக்குத்துறை

5. ராஜ்மோகனுக்கு ஆதி திராவிடர் நலத்துறை

6. முஸ்தபாவிற்கு சிறுபான்மை நலத்துறை

7. வெங்கட் ரமணனுக்கு பள்ளிக் கல்வித்துறை

8. அருண்ராஜிக்கு பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறையும் வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சர்கள் வழங்கப்பட இருக்கிறது. ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சராகிறார்கள்.

SCROLL FOR NEXT