தவெக தலைவர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அமைச்சரவையின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் 23 புதிய அமைச்சர்கள் இன்று (மே 21) பொறுப்பேற்றுள்ளனர். இதில் காங்கிரஸின் 2 அமைச்சர்களும் அடங்குவர். முன்னர் மே.16 அன்று முதலமைச்சருடன் 10 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையில், இதனுடன் 33 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர்.
முக்கிய தவெக அமைச்சர்கள் மற்றும் அவர்களின் இலாகாக்கள் விவரம் பின்வருமாறு:
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் - பொது நிர்வாகம், உள்துறை, காவல்துறை, நகராட்சி நிர்வாகம், இளைஞர் நலம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலம், நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை - செங்கோட்டையன்
ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து மற்றும் நீர்வளத்துறை - என். ஆனந்த்
பொதுப்பணித்துறை, விளையாட்டு மேம்பாட்டுத்துறை - ஆதவ் அர்ஜுனா
மருத்துவத்துறை - அருண்ராஜ்
நிதித்துறை - மரியவில்சன்
போக்குவரத்துறை - விஜய் தமிழன் பார்த்திபன்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை - விக்னேஷ்
பள்ளிக்கல்வித்துறை - ராஜ்மோகன்
உயர்கல்வித்துறை - விஸ்வநாதன் (காங்கிரஸ்)
இந்து சமய அறநிலையத்துறை - ரமேஷ்
மின்சாரம் மற்றும் சட்டத்துறை - சி.டி.நிர்மல்குமார்
வேளாண்துறை - வினோத்
சுற்றுலாத்துறை - ராஜேஸ்குமார் (காங்கிரஸ்)
பால்வளத்துறை - விஜயலட்சுமி
ஏஐ மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை - குமார்
வணிகவரித்துறை - லோகேஷ் தனபால்
தொழில்துறை - கீர்த்தனா