தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இமாலய வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து உள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி விட்டு தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய் விரைவில் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க உள்ளார்.
இந்த வெற்றியை தவெக தொண்டர்கள் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர்.
இந்நிலையில் ராமநாதபுரம் பேருந்து நிலையத்தில் கொட்டும் மழையில் காரில் தவெக துண்டோடு விசில் அடித்து கூச்சலிட்டு ஸ்டண்ட் செய்து ரகளையில் ஈடுபட்டனர்.
இதையடுத்து மக்களுக்கு இடையூறாக ரகளையில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களது காரையும் பறிமுதல் செய்தனர்.